பலரிடம் பண மோசடி செய்வது, மோசடிப் புகாருக்கு ஆளாகி கைதாவது, பிறர் மீது மோசடிப் புகார் தருவதெல் லாம் விஜயநல்லதம்பி வாழ்க்கை யில் வாடிக்கையாக நடந்துவரு வது தான். தற்போது சத்துணவு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.5 லட்சம் மோசடி செய்த புகாரில் கைதாகியிருக்கிறார் விஜயநல்லதம்பி.
விஜயநல்லதம்பி, முன் னாள் சபாநாயகர் காளிமுத்து வின் தம்பி என்பதும், தற் போதைய விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளர் ரவிச்சந்திரனின் தம்பி என்பதும் தெரிந்ததே.
இப்படியொரு அழுத்த மான பின்னணி உள்ளவர் என்பதால், எத்தனை மோசடிப் புகார்கள் வந்தாலும், விஜய நல்லதம்பி விஷயத்தில் காவல் துறை அத்தனை கடுமை காட்டுவதில்லை. மேலும், நீதித் துறை வட்டாரத்தில் பெரிய அளவில் முன்பிருந்த பழக்கத் தின் காரணமாக, விஜயநல்ல தம்பியை காவல்துறை நெருங்குவதற்கு முன்பாகவே, அவருக்கு தகவல் போய்விடும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nalathambi.jpg)
கடந்த 2022ல், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் விஜய நல்லதம்பி, தன் அண்ணன் ரவிச்சந்திரன் மீது மோசடிப் புகார் அளித்திருந்தார். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.68 லட்சத்தை வாங்கி, ரவிச்சந்திரன் ஏமாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார். ஏமாற் றப்பட்ட 7 பேரும் விஜயநல்ல தம்பிதான் எங்களிடம் வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கினார் என்று கூறிவிட, அது விஜயநல்லதம்பி அளித்த பொய்ப்புகார் என்பது விசா ரணையில் தெரியவந்தது.
தன்னிடம் டிரைவராக வேலைபார்த்த தங்கதுரையின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.5 லட்சத்தை வாங்கிய விஜயநல்லதம்பி ஏமாற் றியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தார். கடந்த 1-10-2020 அன்று விஜயநல்லதம்பியிடம் ரூ.3.5 லட்சத்தைக் கொடுத்த போது, கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், ரகசியமாகத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார்.
கடந்த 20-8-2020 அன்று விருது நகர் மாவட்ட குற்றப்பிரிவில் கிருஷ்ணவேணி அளித்த புகார் மீதான விசாரணையைத் தொடர்ந்து, விஜயநல்லதம்பி மீது பண மோசடி, நம் பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவானது. மேலும் பலர் விஜயநல்லதம்பி மீது புகார் அளித்திருக்கும் நிலை யில், விஜயநல்லதம்பியை விருது நகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணவேணி தரப்பிடம் அரசு வேலை வாங்கித்தருவ தாகக் கூறி விஜயநல்லதம்பி பணம் பெற்றுக்கொண்ட வீடியோ பதிவை, 3-12-2022ல் "அரசு வேலை மோசடி; அ.தி.மு.க. ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி' என்னும் தலைப்பில் வெளியிட்டு, அந்த மோசடியை அம்பலப் படுத்தியது நக்கீரன்.
ரூ.3 கோடி பண மோசடி புகாரில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள் ளார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவர் மீது மோசடிப் புகார் அளித்து குடைச்சல் கொடுத்துவருவது விஜயநல்லதம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/nalathambi-t.jpg)